சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 50 ஓட்டுனர்களை கொண்டு சிங்கப்பூரில் துவங்கப்பட்டது Trans-Cab நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய டாக்ஸி சேவை நிறுவனமான Trans-cab நிறுவனத்தை தற்போது சிங்கப்பூரின் மற்றொரு டாக்ஸி சேவை நிறுவனமான Grab வாங்கியுள்ளது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஜூலை 20 அன்று வெளியாகியள்ளது. சிங்கப்பூரின் டாக்ஸி சந்தையை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு டிரான்ஸ்-கேப் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்-கேப் ஒரு ஒருங்கிணைந்த டாக்ஸி மற்றும் தனியார் வாடகை வாகனங்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம், இதில் 2,200 டாக்சிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தனியார் வாடகை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த Grab நிறுவனத்துடனான இணைப்பில், Trans-cabன் டாக்ஸிகள், கார் பராமரிப்பு பணிமனைகள் மற்றும் அவற்றுக்கு எரிபொருள் நிரப்பும் இடங்கள் என்று அனைத்தும் சேர்ந்து வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!
Trans-cabன் நிறுவனர் மற்றும் தலைவரான Teo Kiang Ang பேசியபோது "டிரான்ஸ்-கேப் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, எங்கள் டாக்ஸி ஓட்டுநர்கள் என் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களுடன் சேர்ந்து, நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு 50 டாக்சிகளைக் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்தை துவங்கினோம் ஆனால் ஒரு கட்டத்தில் சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்ஸி நிறுவனமாக மாறும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து வந்துள்ளது பெருமையளிக்கிறது என்றார்.
எனது டாக்ஸி ஓட்டுனர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுக்கு எது சிறந்தது என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளும்போது, Grab எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. எங்கள் ஓட்டுநர்களுக்கும் அவர்களது வணிகத்திற்கு Grab ஒரு சிறந்த நிறுவனமாக இருக்கும் என்று நான் உறுதியாக உணர்கிறேன்," என்று டியோ கூறினார்.
Trans-cabன் டாக்ஸி மற்றும் வாடகை கார் வணிகத்தைப் பெறுவது, Grab-க்கு சிங்கப்பூரில் ஒரு பெரிய தளத்தை வழங்கும், குறிப்பாக சிங்கப்பூரின் பீக் நேரங்களில் அதிக பயணிகள் குறைந்த விலையில் பயணிக்க அது உதவும் என்றார் கிராப் நிறுவன தலைவர். உலக நாடுகளே தொற்று நோய்க்கு பின் பெரிய விலையேற்றத்தை சந்தித்துள்ளது என்றும், சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.
பங்குசந்தையில் Grab நிறுவன பங்குகள் கடந்த 2021ம் ஆண்டு முதல் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் Trans-Cab நிறுவனத்தில் இருந்து தற்போது Grab நிறுவனத்திற்கு மாறியுள்ள ஓட்டுனர்களுக்கு பெரிய அளவிலான சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Grab நிறுவனத்தில் உள்ள அனைத்து சேவைகளும், Trans-cab ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை!!