Singapore News : சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் கடந்த நவம்பர் 15ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் "நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு உதவித்தொகை வழங்கவுள்ளதாக கூறியது.
அதனையடுத்து வருகின்ற 2024ம் ஆண்டில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்த சிங்கப்பூரர்கள் அனைவரும் இந்த டிசம்பர் மாதம் S$200 (12,400 ரூபாய்) முதல் S$800 (50,000 ரூபாய்) வரையிலான Assurance Package எனப்படும் உதவித்தொகையை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் மக்களுக்கு படிப்படியாக பணம் அளிக்கப்பட்டும் வருகின்றது.
சிங்கப்பூரர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கம் அறிவித்த இரண்டு ரொக்கப் பணம் செலுத்துதல்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாவதாக செப்டம்பர் 2023ல் அறிவிக்கப்பட்ட AP கேஷ் ஸ்பெஷல் பேமென்ட் மற்றும் நவம்பர் 2023ல் அறிவிக்கப்பட்ட இரு அறிக்கையின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.
70 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான உகாண்டா பெண்..!!
எவ்வளவு பணம் கிடைக்கும்? யார் யாருக்கு கிடைக்கும்?
சுமார் S$10,0000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் மற்றும் ஒன்று அல்லது சொத்து இல்லாத சிங்கப்பூரர்களுக்கு மட்டுமே AP பணச் சிறப்புப் பணம் கிடைக்கும். தகுதியான சிங்கப்பூரர்கள் அவர்களின் மதிப்பிடக்கூடிய வருமானத்தைப் பொறுத்து S$150 (9300 ரூபாய்) அல்லது S$200 (12,00 ரூபாய்) வர பெறுவார்கள்.
அதே நேரத்தில், வயது வந்த ஒவ்வொரு சிங்கப்பூரரும், அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அல்லது எத்தனை சொத்தை சொந்தமாக வைத்திருந்தாலும், சில தொகை AP ரொக்கத்தைப் பெறுவார்கள். அவர்கள் மதிப்பிடக்கூடிய வருமானம் மற்றும் சொந்தமான சொத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து S$200, S$350 அல்லது S$600 ஆகியவற்றைப் பெறுவார்கள்.