சிங்கப்பூரில் ‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ உணவுப் பொருளுக்கு தடை! அதன் பாக்கெட்டுகளை திரும்பப்பெறவும் உத்தரவு!

Published : Sep 22, 2023, 06:46 PM IST
சிங்கப்பூரில் ‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ உணவுப் பொருளுக்கு தடை!  அதன் பாக்கெட்டுகளை திரும்பப்பெறவும் உத்தரவு!

சுருக்கம்

சிங்கப்பூரில், பிபிக்ஸ் சாய்ஸ் (Bibikis choice) நிறுவனத்தின் ‘பெப்பர் சிக்கன் பேட்டிஸ்’ (Pepper Chicken Patties) என்ற உணவு பாக்கெட்டில் குறிப்பிடப்படாத அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள் காணப்பட்டதால் அதனை திரும்பப்பெறும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தவிட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அதனை வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.  

சிங்கப்பூர் உணவு பாதுகாப்புத்துறை இது தொடர்பான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. முட்டையில் இருக்கக்கூடிய அந்த அலர்ஜிப் பொருள் காணப்படும் உணவு பாக்கெட்டுகளை மீண்டும் திரும்பப்ப பெற்றுக்கொள்ளும் படி அதன் இறக்குமதியாளரான ‘சின் லி-ஹின் ஃபுரோசன் ஃபுட்’ நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட அந்த உணவுப் பாக்கெட்டுகள் சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறும் பணி விரைவாக நடந்து வருவதாகவும் சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுள்ளது.

பொதுவாக, முட்டைகள் மக்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தாது. ஆனால், முட்டையிலிருந்து வரும் வாசனை பிடிக்காதவர்களுக்கும் ஒரு வித அலர்ஜி உள்ளவர்களுக்கு சில நேரம் இதனால் உடல்நலக் சிக்கல்கள் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெப்பர் சிக்கன் பேட்டிஸ் உணவுப் பொருளை அலர்ஜி உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும், இந்தத் தயாரிப்பில் ‘முட்டை’ கலந்திருப்பது தெரியாமல் அவர்கள் உட்கொண்டு அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்பு அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் சிக்கிய புதிய வகை குரங்கு! சிவப்புக் கண்...வெள்ளி உரோமம் கொண்ட சில்வர் லாங்கூர் குரங்கு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!