உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது?.. இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

By Raghupati R  |  First Published Sep 22, 2023, 4:38 PM IST

உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது தெரியுமா? உலக அளவில் சிறந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தரவரிசை எத்தனையாவது இடம் என்று தெரிந்து கொள்ளலாம்.


வெளிநாட்டிற்கு பயணம் செய்ய, பாஸ்போர்ட் வைத்திருப்பது மிகவும் முக்கியம். வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் ஐடி ஆதாரமாகவும் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகிலேயே வலிமையான பாஸ்போர்ட் எந்த நாட்டில் உள்ளது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை வெளியிடுகிறது.

இந்த ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அனைத்து நாடுகளின் தரவரிசையையும் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ITA) வழங்கிய சிறப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் ஹென்லி & பார்ட்னர்ஸ் தலைவர் டாக்டர் கிறிஸ்டியன் ஹெச்.கெலின் என்பவரால் தொடங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

உலகின் வலிமையான பாஸ்போர்ட் 2023

நாடு ரேங்க்
சிங்கப்பூர் 1
ஜெர்மனி 2
ஆஸ்திரியா 3
டென்மார்க் 4
பெல்ஜியம் 5
ஆஸ்திரேலியா 6
கனடா 7
லிதுவேனியா 8
லாட்வியா 9
எஸ்டோனியா 10

சிறந்த பாஸ்போர்ட் பட்டியல்

இந்த ஆண்டு சிங்கப்பூரின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு என்பது தெளிவாகிறது. சிங்கப்பூர் குடிமக்கள் உலகில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இரண்டாவது இடம் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகள் ஜப்பானுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில், இங்கிலாந்து பாஸ்போர்ட் டாப்-4 இடத்தையும், அமெரிக்காவின் பாஸ்போர்ட் 8வது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் தரவரிசை என்ன?

2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் டோகோ மற்றும் செனகல் ஆகியவை 80 வது இடத்தில் உள்ளன. இந்த குறியீட்டின்படி, இந்தியா, டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் பயனர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அதேநேரம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!