சிங்கப்பூர்.. நிறுத்திய சேவைகளை துவங்கும் Scoot மற்றும் SIA - 5 முக்கிய நகரங்களுக்கு பறக்கும் விமானங்கள்!

By Ansgar R  |  First Published Oct 31, 2023, 4:37 PM IST

Singapore News : வரவிருக்கும் டிசம்பர் மாத விடுமுறைக்கு சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மாற்றும் Scoot விமான சேவை நிறுவனங்கள்.


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று அக்டோபர், 30 அன்று வெளியிட்ட தகவலின்படி, வருகின்ற நவம்பர் 26 முதல் சீனாவின் நான்கு நகரங்களுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. மேலும் SIA உடன் இணைந்த சிங்கப்பூர் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான Scootம் அதே நாளில் அதன் சிங்கப்பூர்-சாங்ஷா விமானத்தை மீண்டும் தொடங்கும் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான SIA, அதன் போயிங் 737-8 MAX ஜெட் விமானங்களை இந்த நான்கு வழித்தடங்களில் இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவை அனைத்தும் 154 இருக்கைகள் கொண்ட விமானங்களாக இயங்கும்.

Latest Videos

undefined

MRI இயந்திரத்திற்குள் சிக்கிய செவிலியர்.. நசுக்கப்பட்ட கொடுமை.. இறுதியில் என்ன ஆனது? யார் மீது தவறு?

சில "ஒழுங்குமுறை காரணங்களால்" இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாத இறுதியில் இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நவம்பர் 26 முதல் ஒவ்வொரு வாரமும் சோங்கிங்கிற்கு சென்று திரும்பும் விமானங்கள் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும். மேலும் SIA டிசம்பர் 3 முதல் ஜியாமெனுக்கு தினசரி விமானங்களும் இயக்கப்படும்.

Singapore - Chengdu விமானங்களுக்கான பயணிகளின் தேவையை கண்காணிக்க SIA முடிவு!

கடைசி இலக்கான, செங்டுவிற்கு SIA, டிசம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை வாரத்திற்கு நான்கு சுற்றுப் பயணங்களுடன் தொடங்கும் என்று SIA தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 2024 ஜனவரி 29 வரை, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகருக்கான விமானங்களின் எண்ணிக்கை தினசரி சேவையாக அதிகரிக்கப்படும்.

இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு! சுற்றுலா பயணத்துக்கு விசா தேவையில்லை!

எவ்வாறாயினும், சிங்கப்பூர்-செங்டு விமானங்களுக்கான பயணிகளின் தேவையை SIA கண்காணித்து வருவதால், ஜனவரி 31 முதல் வாரத்திற்கு மூன்று முறை விமானங்கள் திரும்பும் வகையில் விமானங்களின் அளவு குறைக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!