அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!

Published : Dec 10, 2025, 10:48 PM IST
US shooting

சுருக்கம்

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் நகரில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாணவர் பலி

கென்டக்கி மாகாணத்தில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த மாணவர்களை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த காவல்துறை உடனடியாகப் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்து வந்தது.

 

 

மர்ம நபர் கைது

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். படுகாயம் அடைந்த மாணவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து துரிதமாகச் செயல்பட்டதால், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.

தற்போது, கைது செய்யப்பட்ட மர்ம நபரிடம் காவல்துறையினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!