இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது
இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், ஆகிய ஆசிய துணைக்கண்ட நாடுகளில் 150 முதல் 200 அல்-கைதா பயங்கரவாதிகள் அந்நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் எனவும் அது எச்சரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அல்-கைதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு மற்றும் அந்த அமைப்புக்குள்ள ஆதரவு மற்றும் தடைகள், கண்காணிப்பு உள்ளிட்டவைகள் குறித்து 26ஆவது அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய துணைக்கண்டத்தில் ஆப்கனிஸ்தானில் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்களிலிருந்து, தாலிபன் குடையின்கீழ் அவர்கள் செயல்படுகின்றனர். இந்த குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 150 முதல் 200 உறுப்பினர்கள் வரை உள்ளனர். தற்போதைய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா மெகமூத் தங்களது தலைவர் அசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் எனவும் எச்சரித்துள்ளது. 2019 மே 10ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஐஎஸ்ஐஎஸ்ன் இந்திய இணை நிறுவனமான ஹிந்த் விலார் என்ற அமைப்பை உருவாக்கி அதில் 180 முதல் 200 பயங்கரவாதிகள் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஐஏஎஸ் செயற்பாட்டாளர்கள் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரி போராளிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் கடந்த ஆண்டு மே-மாதம் இஸ்லாமிய அரசு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு இந்தியாவில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்பு அதன் அமக் செய்தி நிறுவனம் மூலம் விலாயா ஆஃப் ஹிந்த் இந்திய மாகாணம் என்ற அரபி மொழியில் அந்த அமைப்புக்கு பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.