அமெரிக்காவில் உளவு பார்த்த சீனர்களை கொத்தாக தூக்கிய FBI..!! செய்வதறியாது திகைக்கும் சீன ராணுவம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 25, 2020, 6:53 PM IST

ஜூவான் டாங்  சீன  ராணுவத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதை மறைத்து தனது விசா விண்ணப்பத்தில் ஆராய்ச்சி மாணவி என்ன பொய் கூறினார், என்பதால் அவர் மீது விசா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சீன ராணுவத்தில் பெண் விஞ்ஞானியாக பணியாற்றுவதை மறைத்து ஆராய்ச்சி மாணவி என்ற போர்வையில் போலி விசாவுக்கு விண்ணப்பித்த வழக்கில் சீனப் பெண் விஞ்ஞானியை அமெரிக்காவில் எப்பிஐ கைது செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரைப்போல மொத்தம் மூன்று பேரை  எப்பிஐ கைது செய்துள்ள நிலையில், ஐந்தாவது நபரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் பணியாற்றும் ராணுவத்தினர் பலர், தங்களது உண்மையான தகவலை மறைத்து, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற போர்வையில்  அமெரிக்காவிற்கு வந்து உளவு பார்ப்பதுடன், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும்,  தரவுகளையும் திருடுகின்றனர் என்பது சீனா மீது அமெரிக்கா வைக்கும் குற்றஞ்சாட்டு.  இந்நிலையில்  அமெரிக்காவில் குறைந்தது 25 நகரங்களில்  சீன உளவுத்துறை நெட்வொர்க் இயங்கி வருவதாகவும் அதற்கு சீன தூதரகம் தலைமையகமாக செயல்பட்டு வந்ததாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.

Tap to resize

Latest Videos

இவர்களில் பெரும்பாலானோர் போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் என்று எப்பிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டதுடன்,  டெக்சாஸ்  துரோகத்தையும் மூடுமாறு கண்டிப்பு காட்டியது.  அமெரிக்காவின் இந்நடவடிக்கையை சீனா கண்டித்ததுடன் அதற்கு பழிவாங்கும் விதமாக செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் சீன ராணுவத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஜூவான் டாங் என்பவர், தன்னை ஒரு ஆய்வு மாணவி என போலியான தகவலை கூறி விசாவுக்கு விண்ணப்பம் செய்திருப்பதை கண்டுபிடித்த எப்பிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் இவர் சீன ராணுவத்தில் பணிபுரிகிறார் என்ற உண்மை தெரியவந்துள்ளது. முன்னதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சீனத் தூதரகத்தில் தஞ்சமடைந்த அவரை (ஜூவான் டாங் ) எப்பிஐ சுற்றி வளைத்து பிடித்துள்ளது. அதாவது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த  ஜூவான் டாங்  சீன  ராணுவத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதை மறைத்து தனது விசா விண்ணப்பத்தில் ஆராய்ச்சி மாணவி என்ன பொய் கூறினார், என்பதால் அவர் மீது விசா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர் கைது செய்யப்பட்டது குறித்து இதுவரை  சீன தூதரகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இந்நிலையில் அவர் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு நபர்கள் வாங் ஜின், சாங் சென், ஜாவோ கைகாய் மற்றும் டாங் ஜுவான். ஆகியோர் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் சீன பி.எல்.ஏ.வில் பணியாற்றுவதை மறைத்து தகவலை மாற்றி பொய் சொன்னதாகக் கூறப்படுகிறது, தாங்கள் ஒருபோதும் சீன இராணுவத்தில் பணியாற்றவில்லை என விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர்கள் விசாரித்த பின்னர் ஜூன் 7 ஆம் தேதி வாங் ஜின் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட அனைவரும் சீன ராணுவ பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றுபவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிடதக்கது. 
 

click me!