சீன அரசுக்கும் உள்நாட்டு விஞ்ஞானிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, சீனாவின் அணு சக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து சுமார் 200 விஞ்ஞானிகள் தங்களது பணிகளை திடீரென ராஜனமா செய்துள்ளனர்.
சீன அரசுக்கும் உள்நாட்டு விஞ்ஞானிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, சீனாவின் அணு சக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து சுமார் 200 விஞ்ஞானிகள் தங்களது பணிகளை திடீரென ராஜனமா செய்துள்ளனர். 500 விஞ்ஞானிகளுடன் இயங்கி வந்த அந்த நிறுவனம், விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமா காரணமாக நூற்றுக்கும் குறைவான நபர்களுடன் செயல்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் எந்த அளவிற்கு சர்வாதிகாரத்துடன் சொந்த நாட்டு விஞ்ஞானிகளை நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி என ராஜினாமா செய்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை மோதலில் ஈடுபட்டு வருவதுடன், தனது ஆக்கிரமிப்பு கொள்கையை செயல்படுத்துவதில் தீவிரம்காட்டி வருகிறது. தென்சீனக்கடல் தொடங்கி கிழக்கு லடாக் வரை சீனாவில் அத்துமீறல்கள் தொடர்கிறது, அதேவேளையில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம், சின்ஷியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, தைவான் நாட்டின் மீது ஏகாதிபத்தியம், போன்ற சீனாவின் பல்வேறு அராஜக நடவடிக்கைகளை அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றன. அதுமட்டுமின்றி சீனா தனது எல்லைக்கு வெளியில் மட்டுமல்ல சொந்த நாட்டிற்குள்ளாகவே அடக்குமுறையில் கட்டவிழுத்து விட்டுள்ளதாகவும், அந்நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சீன கம்யூனிஸ்டு அரசு தங்களை சுதந்திரமாக பணி செய்ய விடாமல் தங்கள் மீது அடக்குமுறையை திணித்து வருவதால் தங்களது பணியை ராஜனாமா செய்வதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணிபுரிந்து வந்த சுமார் ஆயிரக்கணக்கான சீன விஞ்ஞானிகளை உடனே நாடு திரும்பும்படி அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்ததின் பேரில் ஏராளமான விஞ்ஞானிகள் சீனா திரும்பினார். அவர்களில் பலர் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக 500 விஞ்ஞானிகளுடன் சீனாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமான அணுசக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் (ஐனெஸ்ட்) இயங்கி வந்தது. உலகில் ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்து சீனாதான் அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை கொண்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் அணு ஆயுத கொள்கை விரிவாக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த அணு ஆயுத அதிகாரமும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் வசம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அந்நாட்டை அணு ஆயுதத்தில் சக்தி மிகுந்த நாடாக உருவாக்கியுள்ளனர். முன்னதாக விஞ்ஞானிகளுக்கு வெளிநாட்டில் கிடைக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்த நிலையில், காலப்போக்கில் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விஞ்ஞானிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் 500 விஞ்ஞானிகளுடன் இயங்கிவந்த சீன அணு சக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை சுமார் 100 விஞ்ஞானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 200 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். இதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆராய்ச்சி நிறுவனத்தை முழுமையாக ஆக்கிரமித்து, தன்னுடைய அழுத்தத்தின் கீழ் அதை செயல்படுத்த விரும்புகிறது. முன்கூட்டியே அரசு கூறியதுபோல விஞ்ஞானிகளுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. தங்களது வேலையில் தங்களுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. அதேபோல் கடுமையான நிதி பற்றாக்குறை காரணமாக எந்த பெரிய திட்டங்களையும் பெறமுடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையே தங்களது ராஷனாமாவுக்கு காரணமாகவும் கூறுகின்றனர். உண்மையில், ஐனெஸ்ட்- ஹெஃபி இன்ஸ்டிடியூட் ஆப் பிசிகல் சயின்ஸின் அறிவுறுத்தலின் கீழ் செயல்படுகிறது. இது சீன அறிவியல் அகாடமி என்றும் அழைக்கப்படுகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களில் பங்கேற்ற சீனாவின் முக்கியமான நிறுவனங்களில் ஐனெஸ்ட் ஒன்றாகும். இந்த ஆராய்ச்சியாளர்களில் 80% பேர் பிஎச்டி பெற்றவர்கள்.நிதி பற்றாக்குறையால் ஐனெஸ்ட்டால் பெரிய திட்டங்களைப் பெற முடியவில்லை என்றும், என ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.