அட்ரா சக்க... ஆஸ்திரேலியாவில் ஆன்-லைனில் விற்பனைக்கு வந்த கயிற்றுக் கட்டில்! ரூ.50,000க்கு விற்பனை...

First Published Oct 7, 2017, 3:33 PM IST
Highlights
Selling on Indian line up to Rs 5000 online


இந்தியக் கிராமங்களில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கயிற்றுக் கட்டிலை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் ஆன்-லைனில் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேனியல் புளோர். இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். அப்போது வட மாநிலங்களுக்கு சென்ற போது, பெருவாரியான மக்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்தி வருவதைப் பார்த்துள்ளார்.

அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு வந்த டேனியல் புளோர், அந்த கயிற்றுக் கட்டிலை தனது சீக்கிய நண்பர் உதவியுடன் செய்துள்ளார். இரு கட்டிலை செய்த டேனியில் ஒரு கட்டிலை தனது நண்பருக்கு கொடுத்துவிட்டு, மற்றொன்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக சிட்னியில் உள்ள இந்தியர் ஒருவரின் சூப்பர் மார்க்கெட் முன் ஒரு சிறிய விளம்பர போஸ்டரை டேனியல் புளூர் வைத்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து ஏராளமானோர்டேனியலுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.

இந்த விளம்பரத்தில், தரமான ேமப்பிள் மரத்தில் செய்யப்பட்ட கட்டில் உறுதியானது. இதை வாங்குபவர்களின் வசதிக்கு ஏற்ப, எண்ணங்களுக்கு ஏற்ப பிலிப்பைன்ஸ் நாட்டு சணல் கயிறு மூலம் டிசைன் செய்து பின்னத் தரப்படும்.  ஆயிரம் ஆண்டு கால இந்தியர்களின் பாரம்பரிய டிசைன். 100 சதவீதம் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டது. இதன் விலை 990 டாலர்கள்(ரூ.50 ஆயிரம்) மட்டுமே என்று விளம்பரம் செய்துள்ளார். இதே போன்ற விளம்பரத்தையும் ஆன்-லைனிலும் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை வரவேற்றும், கிண்டல் செய்தும் ஏராளமானோர் டேனியலின் டுவிட்டருக்கு பதில் தெரிவித்துள்ளனர்.

click me!