இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - நாவல்கள் சிறுகதைகள் எழுதி சாதனை...

 
Published : Oct 05, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - நாவல்கள் சிறுகதைகள் எழுதி சாதனை...

சுருக்கம்

The Nobel Prize for Literature for the year 2017 is reported to the writer of the UK Cusaguosa Issacuro.

2017 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு அறிவிப்பு வெளியாகி வருகிறது. 

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக புவியியல், இயற்பியல், வேதியியல் துறைக்கு அறிவுப்பு வெளியானது. அதன்படி இன்று இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவுப்பு வெளியாகியுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

1954 ஆம் ஆண்டு ஜப்பானில் நாகசாகியில் பிறந்து பிரிட்டனில் குடியேறியவர் கசுவோ இசிகுரோ. நோபல் பரிசுத்தொகையாக ரூ. 7 கோடி அவருக்கு வழங்கப்படுகிறது. 

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு பரிந்துரை குழு தலைவர் சாரா டேனியல் இதை அறிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!