எத்தன நாளைக்கு ஓடி ஒளிய முடியும்? சிக்கினார் மல்லையா..! கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா கைது..!

 
Published : Oct 03, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
எத்தன நாளைக்கு ஓடி ஒளிய முடியும்? சிக்கினார் மல்லையா..!  கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா கைது..!

சுருக்கம்

vijay mallya arrested in london

இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான சேவை நிறுவனம் தொடங்குவதாகக் கூறி தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றார். ஆனால் பெற்ற கடனை மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் அந்த  வழக்கிலிருந்து தப்பிக்கும் விதமாக கடந்த ஆண்டு மல்லையா லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். மல்லையாவை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9000 கோடி ரூபாய் தொகையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவர் தொடங்கிய போலி நிறுவனங்களின் பெயரில் மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், எனவே மல்லையா விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுவார் என சிபிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், லண்டனில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வங்கி மோசடி வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லண்டனில் கைது செய்யப்பட்டபோது பிணையில் வெளிவந்த மல்லையா, இந்த முறையும் லண்டன் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!