மோடி ஒரு பயங்கரவாதி... பாகிஸ்தான் அமைச்சர் கடும் தாக்கு..!

pakistan minister criticize prime minister modi
pakistan minister criticize prime minister modi


பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி எனவும் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தால் இந்தியா ஆட்சி செய்யப்பட்டு வருவதாகவும் டெரரிஸ்தான்(பாகிஸ்தான்) வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்துவருவதாகவும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உற்பத்தி செய்து வருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. 

Latest Videos

அண்மையில் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து உலகநாடுகளுக்கு பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக குற்றம்சாட்டினார். பொறியாளர்களையும் விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் இந்தியா உருவாக்கிவரும் நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குவதாக கடுமையாக விமர்சித்தார்.

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்வதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக டெரரிஸ்தான் என பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பேசியதாவது:

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறுகிறார். ஆனால் இந்தியாவில் ஒரு பயங்கரவாதி பிரதமராகி உள்ளார். குஜராத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் இரத்தம் மோடியின் கைகளில் படிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தால் இந்தியா ஆட்சி செய்யப்படுகிறது.

இவ்வாறு மோடியை பயங்கரவாதி எனவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனவும் முகமது ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image