அமெரிக்காவை அதிர வைத்த பயங்கர துப்பாக்கி சூடு - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு...

 
Published : Oct 02, 2017, 07:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
அமெரிக்காவை அதிர வைத்த பயங்கர துப்பாக்கி சூடு - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு...

சுருக்கம்

The ISS system is responsible for the shooting.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் லாஸ்வெகாஸில் இசை கச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது, சாலையோரத்தில் கூடியவர்கள் மீது அருகில் இருந்த 32 வது மாடியில் இருந்து சில மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதைப்பார்த்த போலீசார் மர்ம நபர்கள் மீது பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய ஒரு மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் அமெரிக்கர் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும். இதைதொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டிற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!