அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு - பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு... 

strangers gun shoot in american people and 50 people death
strangers gun shoot in american people and 50 people death


அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 20 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் லாஸ்வெகாஸில் இசை கச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

Latest Videos

strangers gun shoot in american people and 50 people death

அப்போது, சாலையோரத்தில் கூடியவர்கள் மீது அருகில் இருந்த 32 வது மாடியில் இருந்து சில மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதைப்பார்த்த போலீசார் மர்ம நபர்கள் மீது பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய ஒரு மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர் அமெரிக்கர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய மற்ற நபர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image