ஒரு செயற்கை மூலக்கூறின் ஒரே டோஸ் மூலம் மார்பகத்தில் ஏற்படு்ம சிறிய கட்டிகளை அகற்றவும் பெரிய கட்டிகளை கணிசமாகக் குறைக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எலியை வைத்து செய்த இந்த ஆய்வு மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் திருப்புமுனையாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ErSO-TFPy என்று பெயரிடப்பட்ட மூலக்கூறு, அமெரிக்காவில் உள்ள அர்பானா-சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பல எலிகளுக்கு இந்த மூலக்கூறினை ஒரே ஒரு டோஸ் செலுத்தியதன் மூலம் மார்பக புற்றுநோய் கட்டி அகற்றம் தூண்டப்படுகிறது என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
"மார்பக புற்றுநோய் கட்டிகளை இதுபோல குறைப்பது மிகவும் அரிதானது. அதுவும் ஒரு டோஸ் மூலம் சிறிய கட்டிகளை முற்றிலுமாக அகற்றுவது குறிப்பிடத்தக்கது" என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய வேதியியல் பேராசிரியர் பால் ஹெர்கன்ரோதர் தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் தோராயமாக 70 சதவீதம் பேர் ஈஸ்ட்ரோஜென்-ரிசெப்டர்-பாசிட்டிவ் கொண்டவர்கள். பொதுவாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 5 முதல் 10 ஆண்டுகள் துணை ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீடித்த ஹார்மோன் சிகிச்சையானது இரத்தக் கட்டிகள், தசைக்கூட்டு வலி போன்ற பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கலாம்.
இத்தகைய நீண்ட கால ஹார்மோன் சிகிச்சையில் 20 முதல் 30 சதவீதம் நோயாளிகள் பக்கவிளைவுகள் காரணமாக சிகிச்சையை நிறுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீடித்த ஹார்மோன் சிகிச்சை பெற்ற பிறகும் 30 முதல் 50 சதவீதம் நோயாளிகளுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.