
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய அமெரிக்க தொழில்முனைவோர், முதலீட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு தனது அரசாங்கத்தில் ஒரு முக்கியப் பொறுப்பை வழங்க முடிவு செய்துள்ளார். டிரம்ப் அவரை வெள்ளை மாளிகையின் AI (செயற்கை நுண்ணறிவு) தொடர்பான மூத்த கொள்கை ஆலோசகராக தேர்ந்தெடுத்துள்ளார்.
டிரம்ப் எக்ஸ் தளத்தில், "ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராகப் பணியாற்றுவார். டேவிட் சாக்ஸுடன் இணைந்து பணியாற்றும் அவர், AI துறையில் அமெரிக்காவின் முன்னணி நிலையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த அதிபரின் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, AI கொள்கைகளை வடிவமைக்க உதவுவார். ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது வாழ்க்கையை மைக்ரோசாப்டில் விண்டோஸ் அஸூரின் நிறுவன உறுப்பினராகத் தொடங்கினார்." என்று கூறினார்.
டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, கிருஷ்ணன் எக்ஸ் தளத்தில், "எனது நாட்டிற்கு சேவை செய்யவும், @DavidSacks உடன் இணைந்து பணியாற்றி AI-யில் தொடர்ச்சியான அமெரிக்கத் தலைமையை உறுதி செய்யவும் முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன்." என்று பதிவிட்டார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?
ஸ்ரீராம் கிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் மாவட்டம் கட்டணகுளத்தூரில் உள்ள SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தவர். ஸ்ரீராம் தனது வாழ்க்கையை மைக்ரோசாப்டில் தொடங்கினார். விண்டோஸ் அஸூரின் வளர்ச்சியில் பங்களித்த அவர், அதன் API மற்றும் சேவைகளில் பணியாற்றினார். "Programming Windows Azure for O'Reilly" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர்.
கிருஷ்ணன் 2013 இல் பேஸ்புக்கில் இணைந்தார். அதன் மொபைல் செயலி பதிவிறக்க விளம்பர வணிகத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். பின்னர் ஸ்னாப்பிலும் பணியாற்றினார். கிருஷ்ணன் 2019 வரை ட்விட்டரில் (இப்போது எக்ஸ்) பணியாற்றினார். எக்ஸ்-ன் மறுசீரமைப்பில் எலான் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றினார். 2021 இல் ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸில் (a16z) கூட்டாளியாக பணியாற்றினார். 2023 இல் லண்டனில் நிறுவனத்தின் முதல் சர்வதேச அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார்.
எலான் மஸ்க் டிக்டாக்கை வாங்க.. நான் ஓகே சொல்றேன்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் க்ரீன் சிக்னல்!
கிருஷ்ணன் முதலீட்டாளர் மற்றும் இந்திய நிதி தொழில்நுட்ப நிறுவனமான கிரெட்டில் ஆலோசகராகவும் உள்ளார். தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து "தி ஆர்த்தி அண்ட் ஸ்ரீராம் ஷோ" என்ற ஒலிபரப்பை நடத்துகிறார்.
அடேங்கப்பா! டிரம்பின் வெள்ளை மாளிகையில் இவ்வளவு வசதி இருக்கா!