ஏன் இன்னும் ஒரு ஏலியனைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை? சுவிஸ் விஞ்ஞானிகள் ஆய்வில் விளக்கம்

By SG Balan  |  First Published May 7, 2023, 12:46 PM IST

ஒரு ஏலியன் டிரான்ஸ்மிஷனில் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 60 ஆண்டுகள் ஆகலாம் என்று சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


சுவிட்சர்லாந்தில் உள்ள ஈபிஎப்எல் (EPFL) நிறுவனத்தில் உள்ள உயிரி இயற்பியல் புள்ளியியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் நாம் ஏன் இன்னும் ஏலியன்களைக் கண்டறிய முடியவில்லை என்பதற்கான புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு ஆஸ்ட்ரோனாமிக்கல் ஜெர்னல் (Astronomical Journal) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பால்வெளியில் குறைந்தபட்சம் ஒரு மின்காந்த சமிக்ஞை இருப்பதாகவும், குறைந்தது ஆறு தசாப்தங்களாக பூமி ஒரு அமைதியான குமிழியில் இருப்பதாகவும் ஒரு அனுமானம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், நமது விண்மீன் மண்டலத்தில் எங்கும் ஒரு நூற்றாண்டுக்கு 5க்கும் குறைவான மின்காந்த உமிழ்வுகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

Latest Videos

undefined

"நாங்கள் 60 ஆண்டுகளாகத் தேடுகிறோம்" என்று ஆய்வாளர் கிளாடியோ கிரிமால்டி கூறுகிறார். "பூமி ஒரு குமிழியில் இருக்கக்கூடும், அது வேற்று கிரகவாசிகளால் உமிழப்படும் ரேடியோ அலைகள் அற்றதாக இருக்கும்" என்றும் தெரிவிக்கிறார்.

சார்லஸ் முடிசூட்டு விழாவில் பைபிள் படித்த இந்து.. கோஹினூர் வைரம் என்னாச்சு!! இதை கவனிச்சீங்களா?

ஏலியன்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்காக மிக அதிக அளவில் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் அதனால் போதுமான ஏலியன் டிரான்ஸ்மிஷன்கள் ஸ்கேன் செய்யும் பகுதியைக் கடக்காமல் இருக்கலாம் என்றும் விஞ்ஞானி விளக்குகிறார். இருப்பினும், ஏலியன்களைக் கண்டுபிடிக்க நாம் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானி கூறுகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள தகவல்தொடர்புகளின் தடயங்களை ஸ்கேன் செய்வதற்கு நேரம், தொடர் முயற்சி மற்றும் பணம் தேவை. வேற்று கிரகவாசிகளின் நுண்ணறிவை (SETI) நமக்கு பயனுள்ளதா இல்லையா என்பது குறித்த விவாதங்களும் நடைபெறுகின்றன.

"துரதிர்ஷ்டவசமாக ஏலியன்களின் மின்காந்த சமிக்ஞைகள் இல்லாத ஒரு பகுதியில் ரேடியோ தொலைநோக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்கவில்லை" என்று கிளாடியோ கிரிமால்டி கூறுகிறார்.

"தேடவேண்டிய இடங்கள் இன்னும் நிறைய உள்ளன. தொலைநோக்கிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் குறிப்பாக வேற்றுகிரகவாசிகளின் சமிக்ஞைகளுக்காக தேடுவதைக் காட்டிலும் மற்ற சிக்னல்களைத் தேடுவதுதான் முன்னோக்கிச் செல்ல சிறந்த வழி" என்று பரிந்துரைக்கிறார் கிரிமால்டி.

70 ஆண்டுகளுக்கு பிறகு.. பிரிட்டன் அரசராக முடிசூட்டிக்கொண்டார் 3ம் சார்லஸ் !!

click me!