ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் அதிக அளவிலான இரட்டையர்கள் படித்து வருகிறார்களாம். இந்நிலையில் அந்த பள்ளியில் இந்த ஆண்டும், புதிதாக 17 ஜோடி இரட்டையர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை துவங்கவுள்ளனர்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட கவுன்சில்களில் ஒன்று தான் இன்வெர்க்ளைட் (Inverclyde) என்ற பகுதி, ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் அதிக அளவிலான இரட்டையர்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. அதிக இரட்டையர்களை கொண்ட கவுன்சில் என்ற சிறப்பு பெயரும் இந்த இன்வெர்க்ளைட்க்கு உண்டு. இந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே 147 ஜோடி இரட்டையர்கள் பயின்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளுர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி, ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்க்ளைட் மாவட்டம், ஏற்கனவே அதன் இரட்டையர்களின் அதிக விகிதத்திற்காக 'ட்வின்வெர்க்லைட்' (Twinverclyde) என்று அழைக்கப்படுகிறது என்றும், மேலும் கடந்த 2015ல், 19 ஜோடி இரட்டையர்கள் அங்கு படிக்கச் துவங்கியது தான் மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது என்றும் கூறியுள்ளது.
வழக்கம் போல இந்த ஆண்டும், அந்த மாவட்டத்தில் அதிக அளவிலான இரட்டையர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை துவங்கியுள்ளனர். மேலும் இரண்டாவது முறையாக அங்கு அதிக எண்ணிக்கையிலான இரட்டையர்கள் பள்ளியில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பள்ளியில் சேரும் முன்பாக அந்த cute ட்வின்ஸ் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிவளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
செயின்ட் பேட்ரிக் பள்ளி, ஆர்ட்கோவன் பிரைமரியுடன் இணைந்து, அதிக எண்ணிக்கையிலான இரட்டையர்களை வரவேற்கும் பெருமையைப் பெறும். இந்தப் பள்ளிகள் இரண்டிலும் உள்ள வகுப்பறைகளில், தலா மூன்று ஜோடி இரட்டையர்கள் தங்கள் பாடங்களை பயில்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டு இந்த சின்னஞ்சிறு குழந்தைகளை பள்ளி சீருடையில் காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய பள்ளி மேலாளர், "2016ல் மீண்டும் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயின்ட் பேட்ரிக்ஸ் உட்பட, இன்வெர்க்லைடில் பல சிறப்பாக பள்ளிகளை நடத்துவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம் என்று அவர் கூறினார்.
Pakistan : பாகிஸ்தானின் காபந்து பிரதமர் ஆகிறார் பலுசிஸ்தானை சேர்ந்த அன்வர் உல் ஹக் கக்கர்