சிங்கப்பூரின் செண்டோசா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் வில்லாவில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து கடந்த புதன்கிழமை காலை குறிப்பிட்ட அந்த வில்லாவில் அவர்கள் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த வளாகத்திற்குள் சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களை கண்ட நிலையில், அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளை அங்கு வரவழைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை அடங்கும். இதனையடுத்து அங்கு இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் 46 வயதுடையவர்கள் என்றும் அவர்களில் 35 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார்..
இந்த சம்பவம் எந்த ஹோட்டலில் நடந்தது என்பதை வெளியிட CNB மறுத்துவிட்டது. சந்தேகநபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை அரசை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்பாடு அல்லது போதைப்பொருள் போதைப்பொருள் கடத்தலுக்கு தங்கள் வளாகத்தை பயன்படுத்த அனுமதிக்கும் சொத்து உரிமையாளர், குத்தகைதாரர் அல்லது குடியிருப்பாளர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தமிழருக்கு 12 பிரம்படி.. 18 ஆண்டு சிறை.. சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு