ஏற்கெனவே 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் அதே குற்றத்தில் சிக்கி 18 ஆண்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மார்க் கலைவாணன் தமிழரசனுக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவலும் 12 கசையடிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
44 வயதான தமிழரசன் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடிபோதையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து துணிகளை இஸ்திரி செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பான குற்றச்சாட்டில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்த இவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், வெளியே வந்ததும் மீண்டும் பாலியல் குற்ற வழக்கில் சிக்கியிருக்கிறார். மோசமான பாலியல் வன்கொடுமை, அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை, கோபத்தைத் தூண்டுதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்தாலும் விலைவாசி குறையவில்லை! இலங்கையில் நீடிக்கும் பொருளாதாரச் சிக்கல்!
இதனால், இதனால், தமிழரசன் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடும் என்று கருதி அவருக்கு மேலும் 18 ஆண்டுகள் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 12 கசையடிகளும் கொடுக்க சிங்கிப்பூர் நீதிமன்றம் உத்தரவு போட்டியிருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுபடுத்தும் நோக்கில், தொடர்ந்து சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தடுப்புக் காவல் விதிக்கப்படுகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தமிழரசனின் குற்றப் பின்னணியை காரணமாகக் காட்டி அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் தடுப்புக் காவல் விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். தமிழரசனின் உறவினர் விடுத்த கோரிக்கையின் பேரில் தடுப்புக் காவலுக்கு தமிழரசன் தகுதியானவர் என்பது குறித்து கூடுதல் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், அந்த அறிக்கையும் முந்தைய முடிவுகளை உறுதிப்படுத்தியதால், தமிழரசனை 20 ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் கோரிக்கையை அரசு தரப்பு தொடர்ந்து முன்வைத்தது. இறுதியில் இந்த வழக்கில் தமிழரசன் தான் செய்த குற்றங்களுக்கு வருத்தம் தெரிவிக்காதது மற்றும் தனது செயல்களுக்கு பொறுப்பேற்காதது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் 18 ஆண்டு தடுப்புக் காவலுடன் 12 கசையடிகள் வழங்க உத்தரவு பிறப்பித்தது.