Ukraine: nato:உக்ரைனின் 15% பகுதிகளை ரஷ்யா இணைத்தது செல்லாது ! நேட்டோ பதிலடி: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

By Pothy Raj  |  First Published Oct 1, 2022, 10:48 AM IST

உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தது சட்டவிரோதம், சட்டப்பூர்வமாகச் செல்லாது என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.


உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தது சட்டவிரோதம், சட்டப்பூர்வமாகச் செல்லாது என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. 

Tap to resize

Latest Videos

இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவி்த்தது மட்டுமல்லாமல் உக்ரைனில் அரசுக்கு எதிராக, ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்படும் பகுதிகளையும் சுதந்திரம் பெற்றதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

ஏறக்குறைய 5 மாதங்கள் வரை உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் கடும் போர் மூண்டது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை அழித்து, பொருளாதார ரீதியாக நாசப்படுத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போருக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரி்க்கா கடும்கண்டனம் தெரிவித்தன. 

ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி தடை போன்றவற்றையும், சர்வதேச பணப்பரிமாற்றம் செய்யவும் தடை விதித்தன. இதனால் சர்வதேச சூழலில்இருந்து ரஷ்யா தனிமைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் கிரெம்ளின் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உக்ரைன் நாட்டின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். அதாவது உக்ரைனின், கேர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோன்ட்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது, இந்தப்பகுதிகளின் நில எல்லைகளைக் காக்க ரஷ்யா எந்த நடவடிக்கையும் எடுக்கும் என அதிபர் புதின் நேற்று அறிவித்தார்

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே, பாஜக தலைவர் சுப்ரமணியன்சுவாமி சந்திப்பு!!

இதற்கு உக்ரைன் அரசு கடும்  எதிர்ப்புத் தெரிவித்தது. உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் தங்கள் நாட்டை சேர்க்க பணிகளை வேகப்படுத்தி விண்ணப்பத்தை விரைவுப்படுத்தினார்.

இதற்கிடையே உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்துவிட்டதாக அதிபர் புதின் அறிவித்ததற்கு நேட்டோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு செல்லாது, சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் அளித்த பேட்டியில் “ உக்ரைனின் எந்தப் பகுதியையும் ரஷ்யா இணைத்துவிட்டதாகக் கூறுவதை நேட்டோ நாடுகளின் கூட்டுப்படைகள் ஏற்காது. உக்ரைனின் நிலப்பகுதியை ரஷ்யா கைப்பற்றியது சட்டவிரோதமானது, செல்லாது”எனத் தெரிவித்தார்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விண்ணப்பம் அளித்தசிலமணி நேரத்தில் நேட்டோ அமைப்பு ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை... எந்த நாட்டில் தெரியுமா?

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்டஅறிவிப்பில் “ நேட்டோ நாடுகளின் மண்ணைக் காக்க அமெரிக்கா நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது. நான் சொல்வதை புதின் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். எங்கள் படையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். 

விரைவில் ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கும்.புதினின் செயல்களைப் பார்க்கும்போது, புதின் தடுமாறுகிறார் எனத் தெரிகிறது. அவரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும், மிரட்டல்களும் அதைத்தான் குறிக்கின்றன. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களைநாங்கள் வழங்குவோம் ” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யஅதிபர் விளாதிமிர் புதின் உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை இணைத்துக்கொண்டதாக அறிவித்தமைக்கு எதிராக வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன, இந்தியா, சீனா,காபான், பிரேசில் நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆனாலும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது
 

click me!