இந்தியாவிற்கு தோளோடு தோள் கொடுக்கும் ரஷ்யா...! அமெரிக்கா, சீனாவிற்கு வயிற்றெரிச்சல்...!

By Asianet TamilFirst Published Aug 27, 2019, 12:07 PM IST
Highlights

இந்தியாவின் நம்பிக்கைக்குறிய நட்புநாடு என்பதால் ரஷ்யாவும் மனமுவர்ந்து இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. மற்றும் அவர்கள் தங்கள் நாட்டின்  தொழில் நுட்பம், மற்றும் விண்வெளி பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளது ரஷ்யா. 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்  இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு  நட்பு நாடான ரஷ்யா இந்திய விஞ்ஞானிகளுக்கு பயிற்ச்சி அளிப்பதுடன் தொழில் நுட்பரீதியாக உதவிகளை மேற்கொள்ளவும் முன்வந்துள்ளது. 

சந்திராயன் ஒன்று, மற்றும் சத்திராயன் இரண்டு என தொடர்ந்து பல சாதனைகளின்  மூலம், சர்வதேச அளவில்  விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது இந்தியா. இந்ந நிலையில் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா இறங்கியுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா உரையில் இந்திய பிரதமர் மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்,  இந்த நிலையில் சுமார் 10.000 கோடி ரூபாய் பொருட்செலவில் மூவரை ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவது இந்தியாவின் திட்டமாக உள்ளது.  

இந்த நிலையில் விண்ணிற்கு மனிதனை அனுப்புவதில் கைதேர்ந்த நாடானா ரஷ்யா என்பதால், ககன்யான் திட்டத்திற்காக இந்தியா ரஷ்யாவின் ஆலோசனைகளை கேட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கடந்த 50 ஆண்டுகால  அனுபவமும் , இந்தியாவின் நம்பிக்கைக்குறிய நட்புநாடு என்பதால் ரஷ்யாவும் மனமுவர்ந்து இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. மற்றும் அவர்கள் தங்கள் நாட்டின்  தொழில் நுட்பம், மற்றும் விண்வெளி பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளது ரஷ்யா. 

அது மட்டுமால்லாது கடந்த வாரம் ரஷ்யாவிற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்  பயணம் மேற்கொண்டதையடுத்து  அதற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பயணத்தின்போது அவர் ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் இயக்குநர் ஜெனரல் டிமிட்ரி ரோகோசினை சந்தித்தார். அப்போது இந்திய விஞ்ஞானிகள் ககன்யான் திட்டம் தொடர்பாக தங்களை சந்தித்தது பற்றியும் அவர்கள்  இந்திய விஞ்ஞானிகளுக்கு வழங்கிவரும் ஆலோசனைகள் பற்றிய தகவல்களையும் தோவலிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், இந்திய குழுவினர் விமான கேரியர், ராக்கெட் ஏரோடைனமிக் சோதனைகள்,  மற்றும் பைலட் வாகனம் மற்றும் மீட்பு குழு அமைப்பு பற்றியும் விரிவாக விவாதித்துள்ளதாகவும் அவர் தோவலிடம் தெரிவித்துள்ளார். 
 

click me!