’ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க...’ இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்..!

By Thiraviaraj RMFirst Published Aug 27, 2019, 11:25 AM IST
Highlights

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயங்காது என அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயங்காது என அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் இந்தியா மீது ஆத்திரத்தில் உள்ளது. உலக நாடுகளை தங்களுக்கு ஆதரவு தருமாறு மாகிஸ்தான் அழைப்பு விடுத்தும் எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நேற்று மோடியுடன் பேசிய ட்ரம்ப் அது இரு நாட்டு விவகாரம். அதில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

ட்ரம்ப் ஒதுங்கிக் கொண்டது பாகிஸ்தானை மேலும் வெறுப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய அவர், ‘’இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத்தயாராக இருக்கிறது. அணு ஆயுதப்போர் நிகழ்ந்தால் வென்றவர், தோற்றவர் யாரும் இருக்கமாட்டார்கள். உலக நாடுகளுக்கு இத்தகைய போரை தடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

செப்டம்பர் 27 ஆம் தேதி ஐ.நா.பொதுக் குழுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை உலக நாடுகள் முன் எழுப்பி உரை நிகழ்த்த இருக்கிறேன். உலக அரங்கில் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் விவாதித்து வருகிறது. 1965 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஐ.நா.சபை காஷ்மீருக்காக கூட்டத்தை கூட்டியது. சர்வதேச ஊடகங்களில் இது மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:- ’இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டது மறந்து போச்சா..?’ பாகிஸ்தானுக்கு பாஜக தலைவர் பதிலடி.!

click me!