Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யபடைகள் 12 வது நாளாக போரை தொடர்ந்து வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான இராணுவ தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கீவ், கிமி உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா படைகள் குண்டு மழையை பொழிந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. குடியுருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைக்ள், கல்வி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. மேலும் உக்ரைன் இராணுவம் ரஷ்யா தாக்குதல் எதிர் வினை ஆற்ற அணு குண்டுகளை தயாரிப்பதாக புதிய குற்றச்சாட்டை ரஷ்ய அதிர் முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க: Ukraine-Russia War: சின்னாபின்னமானது உக்ரைன் விமான நிலையம்... மீண்டும் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா!!
12 வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்துள்ளது. குறிப்பாக துறைமுக நகரங்களை கைப்பற்ற அங்கு வான்வழித்தாக்குதலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யபடைகள் கைப்பற்றியுள்ளது. அங்கு நகரம் முழுவதும் குண்டு தாக்குதல் பலியான மனித உடல்களாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போர் காரணமாக உயிரிழப்புகளோடு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் உக்ரைன் சந்தித்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார தடைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்க வேண்டும் என்பதே இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க: Ukraine-Russia War: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும்... எச்சரிக்கை விடுக்கும் புடின்!!
உக்ரைன் மீது ரஷ்யபடைகள் 12 வது நாளாக போரை தொடர்ந்து வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார்.இந்த உரையாடலின் போது, ரஷ்ய படைகள் சுற்றிவளைத்துள்ள உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலிருந்து பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு தவறிவிட்டதாக புதின் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் உக்ரைனின் அணு உலைகளை தாக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட மற்றுமொரு முக்கிய நகரமான டான்பாஸை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இராணுவ நடவடிக்களின் முன்னேற்றம் மற்றும் தாக்குதல் நடவடிக்கையின் பிரதான நோக்கம் குறித்து விளக்கபட்டதாக கூறப்படுகிறது.முன்னதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி, உக்ரைன், ரஷ்யா இடையே மும்முனை பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார். இதுக்குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் பேசும் போது, அவர் இது நல்ல யோசனை என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை காணொளி வாயிலாகவோ அல்லது ஏதேனும் ஒரு மூன்றாவது நாட்டிலோ வைத்து நடப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதார்.