Ukraine - Russia Crisis : கடுப்பான ஐரோப்பிய யூனியன்.. ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்கம்..இதெல்லாம் தேவையா..?

By Raghupati R  |  First Published Feb 26, 2022, 7:36 AM IST

ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.


நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் அண்டை நாடான ரஷ்யா, அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து பொருளாதாட தடை விதித்து வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இந்த ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியாவை தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா வெளிநாடுகள், பெரு நிறுவனங்களிடையே பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது நிறுத்தப்படும். இது ரஷியாவின் பொருளாதாரத்திற்கு பேரடியாக விழும்.

அதேவேளை, இந்த தடை விதிக்கப்படும் பட்சத்தில் ரஷியா, சீனாவின் உதவையை நாடலாம். மேலும், கிரிப்டோ கரண்சி எனப்படும் மெய்நிகர் பணத்தின் மூலம் பரிவர்த்தனைகளை ரஷியா மேற்கொள்ளாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிடையே ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. ஷிப்ட் அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்படும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் , உக்ரைன் மீதான ராணுவ தாக்குதல் காரணமாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், எனினும் இது தற்காலிகமான ஒன்று என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டாலும் ரஷியாவுடன்  தகவல் தொடர்பு வழிகள் முடக்கப்படாது என்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!