Russia-Ukraine crisis: உக்ரைனில் ராணுவ ஆட்சி வேண்டும்..புது ரூட்டை கையில் எடுக்கும் புதின்..சொல்ல வருவது என்ன?

By Thanalakshmi V  |  First Published Feb 25, 2022, 10:14 PM IST

Russia-Ukraine crisis:உக்ரைன் நாட்டின்  ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டின் ராணுவம் கையில் எடுக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.மேலும் உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்ட உள்ளிட்ட நாடுகளுக்க பொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.ரஷ்யாவில் உள்ள உலோகங்கள், எரிவாயு உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

இதனிடையே உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்- ல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது, உக்ரைன் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து கொள்ள வருமாறு அந்நாட்டின் ராணுவத்திற்கு ரஷிய அதிபர் புதின் புதிய அழைப்பு விடுத்துள்ளார். இதுக்குறித்து, ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய புதின், உக்ரையில் தற்போதைய ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும்.மேலும் உக்ரைன் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு கொண்டுவர முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்யா, உக்ரைன் மீது காலணி ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது. 

click me!