Russia-Ukraine crisis:ஆப்பு மேல் ஆப்பு..ரஷ்ய அதிபரின் சொத்துகள் முடக்கம்..பதிலடி கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

Published : Feb 25, 2022, 09:21 PM IST
Russia-Ukraine crisis:ஆப்பு மேல் ஆப்பு..ரஷ்ய அதிபரின் சொத்துகள் முடக்கம்..பதிலடி கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

சுருக்கம்

Russia-Ukraine crisis:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்புடைய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து, இந்த சொத்து முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

Russia-Ukraine crisis:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்புடைய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து, இந்த சொத்து முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள நிலையில், உலக அளவில் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. போரை நிறுத்தக் கோரி உலக நாடுகள் பலவும் ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

 உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்- ல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விளாடிமிர் புதின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது.27 நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் செய்த விவாதத்தின் அடிப்படையில் இந்த சொத்து முடக்க உத்தரவு வெளிவந்துள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்களுக்கு இருக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்யாவின் நிதி, ஆற்றல், ஏற்றுமதி துறைகள் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இந்த தடைகள் தொடர்பாக பேசிய ஐரோப்பிய பொருளாதார ஆணையர் பாவ்லோ ஜென்டிலோனி என்பவர், "நிச்சயமாக இந்தப் போருக்கு பொருளாதார ரீதியில் ஒரு தாக்கத்தை ரஷ்யா மீது நாங்கள் செலுத்துவோம். ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களின் பேச்சுவார்த்தை பாரிஸில் நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் போர் பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக விவாதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!