Russia-Ukraine crisis: உக்கிரமடையும் போர் .. இராணுவ உதவி செய்த முதல் நாடு..தெம்பாக நின்று அடிக்கும் உக்ரைன்..

By Thanalakshmi VFirst Published Feb 25, 2022, 7:16 PM IST
Highlights

ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவம்,தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரஷ்யா மீது அமெரிகா, பிரிட்ட, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க ரஷ்யாவும்முடிவு செய்துள்ளது.அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குபொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.ரஷ்யாவில் உள்ள உலோகங்கள், எரிவாயு உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா விமானநிலையங்கள் மற்றும் வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்க ரஷ்யா தடைவிதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்ட கூறிய நிலையில் ரஷ்யா பதலடி கொடுத்துள்ளது. உக்ரைன்விகாரத்தில் சீனா மட்டுமே ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

உலகின் சக்தி வந்த நாடான ரஷ்யாவை நேற்று எப்படி தனியாக எதிர்த்தோமோ, அதேபோலதான் 2வது நாளான இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம்.உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது என்றுஉக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது.
இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறதுஎன்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவம்,தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவி செய்யும் முதல் நாடு ஸ்வீடன் ஆகும்..

click me!