7 மொழிகளில் பேசி அனைவரையும் வியக்‍க வைத்த 4 வயது குழந்தை

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 06:06 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
7 மொழிகளில் பேசி அனைவரையும் வியக்‍க வைத்த 4 வயது குழந்தை

சுருக்கம்

ரஷ்யாவில் நான்கு வயதான குட்டிப் பெண் பெல்லா உலகின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் 7 மொழிகளில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. ரஷ்யாவின் மாஸ்கோவில் வசிக்கும் பெல்லா தேவ்யாட்கினா என்னும் 4 வயது குழந்தை ஏழு மொழிகளில் சரளமாக பேசி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கவைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெல்லா, ரஷ்ய மொழி, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு, சீன மொழி மற்றும் அரபு என ஒரே நேரத்தில் ஏழு மொழிகளில் பேசி கலக்கினார். பெல்லாவின் திறமை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட 7 மொழிகளை பெரியவர்கள் கூட புரிந்து கொள்வது கடினமாகக் கருதப்படும் சூழலில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் பெல்லா பெற்றிருக்கிறார். ரஷ்யாவில் 7 வயதான பின்னரே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவது வழக்கம். அந்தவகையில் பள்ளிப்படிப்பைத் தொடங்கவே இன்னும் 3 வருடங்கள் இருக்கும் நிலையில் பெல்லாவின் மொழியியல் திறன் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதுகுறித்து பெல்லாவின் தாய் யூலியா கூறுகையில், அவருக்கு 2 வயது இருக்கும்போது ரஷ்ய மொழி மற்றும் ஆங்கில மொழியினை கற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து மொழிகளைக் கற்றுக் கொள்வதில் பெல்லா காட்டிய ஈடுபாடு காரணமாக மேலும் சில மொழிகளை அவருக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!