டிரம்பின் வார்த்தைகளால் 281 வி.ஐ.பி.களுக்கு அவமானம்

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 05:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
டிரம்பின் வார்த்தைகளால் 281 வி.ஐ.பி.களுக்கு அவமானம்

சுருக்கம்

இந்திய அமெரிக்க கவர்னர் பாபி ஜின்டால், நிக்கி ஹாலே ஆகியோர்  குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பால் அவமானப்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். 

அமெரிக்காவின் பிரபலமான நாளேடான நியூயார்க் டைம்ஸ்  குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை எத்தனை வி.ஐ.பி.களை டுவிட்டர் மூலம், அவமானப்படுத்தி இருந்தார், அசிங்கப்படுத்தி இருந்தார் என்ற பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. 

இந்த நாளேட்டில் கூறப்பட்டுள்ளதாவது, “ கடந்த ஜூன் மாதம் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அதிபர் வேட்பாளர்களாக களத்தில் போட்டியிட்டவர்கள், பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள், மக்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் டிரம்பின் வார்த்தைகளால் மனம் நோகடிக்கப்பட்டனர். 

இதில் லூசியானா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் இந்திய அமெரிக்கருமான பாபி ஜின்டாலை, ‘எனக்கு சமமானவர் ஜின்டால் கிடையாது. நியூஹேம்ப்ஷையர்நகரில்  ஆயிரம் டாலர் செலவு செய்துவிட்டு விலகிவிட்டார். எதற்கு உதவாதவர்’. என டிரம்ப் வார்த்தைகளால் நோகடித்தார். 

நார்த் கரோலினா கவர்னர் ஹேலே குறித்து டிரம்ப் குறிப்பிடுகையில்,  “ நிக்கி ஹேலேயைப் பார்த்து அந்த மாநில மக்கள் வெட்கப்படுகிறார்கள்'' என்றார். சி.பி.எஸ்.நியூஸ் சேனலின் பத்திரிகையாளரும், இந்திய அமெரிக்கருமான சோபன் டெப் என்பவரை, ‘நேர்மையில்லா செய்தியாளர்’; ‘சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்‘; , ‘பொய்யர்’ என சாடினார். இதனால், கடந்த மார்ச் மாதம் சிகாகோ நகரில் நடந்த டிரம்பின் பிரசாரக் கூட்டத்தில் சோபன் டெப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், ஆளும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், சவூதி இளவரசர் அல்வாலீத் பின் தலால், முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆகியோரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், ‘அசோசியேட்ஸ் பிரஸ்’, ‘சி.என்.என்.’, ‘பார்டியூன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’, ஆகிய செய்தி நிறுவனங்கள், டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தம், ஒபாமா கேர்திட்டம், ஈரான் அணு ஒப்பந்தம், ஹிலாரி மற்றும் செல்சி அமைப்பு,  தேர்தல் முறை என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!