மாேத தயாராகும் அமொிக்கா-ரஷ்யா : 35 தூதரக அதிகாரிகளை ஒபாமா வெளியேற்றியதால் பதற்றம்!

First Published Dec 30, 2016, 12:24 PM IST
Highlights


ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார்.  பிரசார வியூகம், நிதி திரட்டுவது, ஆதரவாளர்கள் பட்டியல் என ஜனநாயக  கட்சியினர் இணையத்தில் திரட்டி வைத்திருந்த தகவல்களை, ரஷ்ய உளவாளிகள் திருடியதே ஹிலாரியின் தோல்விக்காரணம் என புகார் எழுந்தது. 

தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க, ரஷ்யா முயன்றதாகவும், ஜனநாயக கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதினுக்கு, டிரம்ப் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தது, இந்த புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது. 

இந்நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது. இது போன்று ரஷ்யா மீது தொடர் நடவடிக்கை  மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

click me!