
ரஷ்யா தொடர்ந்த போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு குழந்தைகளின் நலனுக்காகவும், கல்விக்காகவும் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 5 லட்சம் டாலர்கள்(ரூ.38கோடி) நன்கொடையாக வழங்க உள்ளார்.
போர்
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 23-வது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் தாயாராகியபோதிலும் மறுபுறம் போரும் நடந்து வருகிது.
அகதிகள்
தலைநகர் கீவ் நகரை ரஷ்யப்படைகள் நெருங்கியுள்ளன. அதேநேரம் லவீவ் நகரின் புறநகர், கீவ் நகரின் புறநகரிலும் ரஷ்யப் படைகள் நேற்று ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலமாகச் சென்றுள்ளனர். ஏறக்குறைய 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. உக்ரைன் நாட்டின் 7% மக்கள் அகதிகளாகச் சென்றுள்ளனர்
நிதியுதவி
இந்நிலையில் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முன்வந்துள்ளார். தன்னுடைய அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரோஜர் ஃபெடரல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உக்ரைனில் நடக்கும் சம்பவங்கள், அது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்தபோது நானும், எனது குடும்பமும் அதிர்ச்சி அடைந்தோம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்தபோது எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது.
குழந்தைகள் கல்வி
அமைதிக்காக நாங்கள் துணையிருப்போம். உக்ரைனில் உதவி தேவைப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் நாங்கள் உதவ இருக்கிறோம். தற்போது உக்ரைனில் 60 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் கல்வியும், ஆதரவும்அளிக்க வேண்டியது அவசியம்.
ஆதலால் ரோஜர் ஃபெடரல் அறக்கட்டளை சார்பில் உக்ரைன் குழந்தைகள் பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்காக 5 லட்சம் அமெரி்க்க டாலர்கள் உதவியாக வழங்கப்படும்”
இவ்வாறு ஃபெடரல் தெரிவித்துள்ளார்
முர்ரே
பிரிட்டன் முன்னாள் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, இங்கிலாந்தின் யுனெசெப் தூதராக இருந்து வருகிறார். அவர் கடந்த வாரம் விடுத்த அறிவிப்பில் 2022ம் ஆண்டு நான் வென்ற டென்னிஸ் போட்டிகளில் கிடைத்த பரிசுப்பணத்தை உக்ரைன் குழந்தைகளின் நலனுக்காக வழங்குகிறேன் எனத் தெரிவித்தார்