ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் செயல்முறையில் முன்னேற்றம்... செலன்ஸ்கி அதிகாரப்பூர்வ தகவல்!!

By Narendran S  |  First Published Mar 18, 2022, 10:55 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 


ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், காவல்நிலையங்கள் என பல முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்துள்ளன. உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என செலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறுகையில், வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான செயல்முறையில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும். உக்ரைன் அரசு மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களின் இலக்கை அடைவதற்கான முயற்சியை இணைந்து முன்னெடுத்து செல்வோம் என்று செலன்ஸ்கி  தெரிவித்துள்ளார். 

click me!