Ukraine - Russia Crisis: ரஷ்யாவுடன் பேச தயார்.. அவங்க இடத்துக்கே போறோம்.. உக்ரைனின் திடீர் திருப்பம்..

By Thanalakshmi V  |  First Published Feb 27, 2022, 8:55 PM IST

Ukraine - Russia Crisis:போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


Ukraine - Russia Crisis:போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அந்நகர்களில் உள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் 4 நாட்களில் மட்டும் 1.68 லட்சம் பேர்  உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போலந்து , மால்டோவா,ஹங்கேரி, ரூமேனியா, சுலோவாக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்து வருவதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாடு வாரியாக தஞ்சம் அடைந்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இதுவரை அதிக பேர் போலந்திற்கு சென்றுள்ளனர். மேலும் கடந்த 48 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உக்ரேனியிலிருந்து எல்லையை கடந்துள்ளதாக போலந்து அரசு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நான்கு நாட்களாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பெலாரஸ் அரசும் ரஷ்யா எங்கள் மீது போர்தொடுக்க உதவியுள்ளதால் அங்கு பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று உக்ரைன் அதிபர் மறுத்திருந்தார்.மேலும் மற்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் விளக்கிருந்தார். வார்சா,புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகூ ஆகிய இடங்களை பேச்சுவார்த்தைக்காக முன்மொழிந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த போது, அதனை உக்ரைன் அரசு மறுத்திருந்தது. இந்நிலையில் தற்போது பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புகொண்டுள்ளதாக ரஷ்யா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

click me!