
உக்ரைன் தலைநகரை கைப்பற்றி தங்கள் தேசத்தின் கொடியை நாட்டுவதற்கு ரஷ்ய படைகள் தொடர்ந்து பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது வரை வெறும் 4 நாட்களில் 3.65 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் , இந்த எண்ணிக்கை நான்கு மில்லியன் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைன் நாட்டின் வான்வெளியில் பயணிகள் விமானம் செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இதனால் , அண்டை நாடுகளான ஹங்கேரி, ரூமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக உக்ரைனிலிருந்து சாலை மார்க்கமாக ரூமேனியா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 219 பேர், நேற்று மும்பை வந்தடைந்தனர். பின்னர் இவர்களை மத்திய அமைச்சர் பூயுஸ் ஹோயல் வரவேற்றார். இன்னும் அங்கு 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். மெட்ரோ நிலையம், சுரங்க பாதை, பதுங்கு குழி உள்ளிட்ட இடங்களில் பாதுக்காப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இருக்கும் இடத்திலே பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்குமாறும் அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஆபத்து நிறைந்த இடங்களை குறிப்பிட்டு, இந்த வழியாக சென்று எல்லையை கடக்க வேண்டாம் எனவும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் க்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தேடி சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை 1KG பிரியாணி உணவகத்தின் நிறுவனர் வழங்கி வருகிறார். தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருவதால், அடிப்படை தேவையான உணவு கூட இல்லாமல் மக்கள் இன்னல் பட்டு வருகின்றனர். இதனிடையே, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களுக்கு தேவையான உணவுகளை,1 KGபிரியாணி உணவகத்தின் நிறுவனர் பாலசங்கர் நேரில் சென்று வழங்கி வருகிறார். தற்போது இவரது இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
"