Ukraine - Russia Crisis: திடீர் பல்டி..பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வரவில்லை..போர் தொடரும் - ரஷ்யா அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Feb 26, 2022, 8:20 PM IST
Highlights

Ukraine - Russia Crisis: போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்துவிட்டது என்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் போர் தொடரும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளார்.
 

நோட்டோ அமைப்பு நாடுகள் உதவ முன்வரவில்லை என்றும் தனித்துவிடப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் பேசிய நிலையில், பாதுகாப்பு காரணமாக உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உடனடியாக நிதியுதவி கிடைக்கும் ஆவணத்தில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிற நாடுகள் உடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளதாகவும் ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின் என்றும் உக்ரைன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது நாளாக தொடந்து நடைபெற்று வரும் போரில்,உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கீவ் அருகே 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் நெருங்கிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கீவ் நகர மேயர் அறிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டை விட்டு கொடுக்க மாட்டோம் எனவும் எங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் நலனுக்காக போராடுகிறோம் என்று அவர் பேசியுள்ளார். கீவ்வில் சண்டை நடக்கும் நிலையில் உக்ரைன் இருந்து வீடியோ வெளியிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்துவிட்டது என்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் போர் தொடரும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளார்.

click me!