ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவாக இருங்கள்... பிரதமர் மோடியிடம் ஜெலன்ஷ்கி கோரிக்கை!!

By Narendran S  |  First Published Feb 26, 2022, 7:43 PM IST

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் இன்று உச்சம் தொட்டுள்ளது. அங்கு ரஷ்யா கடுமையான வான்வெளி, ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதனிடையே ரஷ்ய ராணுவம் மக்கள் குடியிருப்புகளை நோக்கியும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்த ரஷ்யா, ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி வருவதாக விளக்கம் அளித்தது. இந்தச் சூழலில் தலைநகர் கீவ்வில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது நேற்றிரவு ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ உறுதி செய்துள்ளார். மேலும், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

 

Spoke with 🇮🇳 Prime Minister . Informed of the course of 🇺🇦 repulsing 🇷🇺 aggression. More than 100,000 invaders are on our land. They insidiously fire on residential buildings. Urged 🇮🇳 to give us political support in🇺🇳 Security Council. Stop the aggressor together!

— Володимир Зеленський (@ZelenskyyUa)

உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டதாக ட்விட் செய்துள்ளார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமரை கேட்டுக் கொண்டதாக கேட்டுக்கொண்டார். மேலும், இந்த உரையாடலின்போது ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைன் போர் நிலவரம் குறித்தும் எடுத்துரைத் துள்ளார். உக்ரைன் குடியிருப்புகளின் மீது ரஷ்யா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மோடியிடம் செலன்ஸ்கி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

click me!