Ukraine - Russia Crisis: போர் பதற்றம்.. உயிர் பயத்தில் மக்கள்.. அண்டை நாடுகளுக்கு படையெடுக்கும் கூட்டம்..

By Thanalakshmi V  |  First Published Feb 26, 2022, 7:22 PM IST

Ukraine - Russia Crisis: ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லை தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.


உக்ரைனில் கடந்த சில நாட்களாக போர் வெடித்துள்ள நிலையில்,எல்லை கடந்து போலந்துக்கு சுமார் 1 லட்சம் பேர் வந்திருப்பதாகவும் , போலந்து நாட்டின் எல்லை கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் இதனை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

நேட்டோவில் அமைப்பில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

மூன்றாவது நாளாக தொடந்து நடைபெற்று வரும் போரில்,உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கீவ் அருகே 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் நெருங்கிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கீவ் நகர மேயர் அறிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லை தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் போலந்துக்குள் வந்திருக்கும் 90 சதவீத மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்கிருப்பதாகவும் சிலர் அங்குள்ள உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் சிலர் மட்டுமே எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க இடங்கள் கோரியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது உக்ரைன் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது.வெள்ளிகிழமை வரை உக்ரைனிலிருந்து போலந்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்துள்ளது.போலந்து நாடு மட்டுமல்லாமல், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவாகியா,ரோமானியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கும் இடம்பெருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!