Russia-Ukraine Crisis: ரஷ்யா- உக்ரைன் இரண்டுமே முக்கியம் நமக்கு.. நடுநிலை தான் சரியானது..இந்தியா வெளிப்படை..

By Thanalakshmi V  |  First Published Feb 26, 2022, 4:04 PM IST

Russia-Ukraine Crisis:ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கவில்லை.


உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில்,ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.உக்ரைனில் இருந்து ரஷ்ய இராணுவ படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகள் ஆதிரத்து வாக்களித்தன.ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி மேலோங்கி இருந்தது.

Tap to resize

Latest Videos

ஒரு புறம் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.ஆனால் ரஷ்யா,தீர்மானம் கொண்டு வரும் போது இந்தியா எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.இந்த சூழலில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இருப்பினும் ரஷ்யா தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது.

இதுக்குறித்து இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி இந்தியா தரப்பு வாதங்களை வைத்தார். அவர் பேசும்போது,பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி என்றும் மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது என்றும் வலியுறுத்தினார். மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

வர்த்தகத்தை பொறுத்தவரையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இருநாடுகளுடனும் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது.அதேசமயம் ரஷ்யாவை பொறுத்தவரையில் இந்தியா தொடர்ந்து நல்லுறவுடன் இருந்து வருகிறது.உக்ரைனில் மட்டுமே 20 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுடைய நலன் மிக முக்கியம்.ஆதலால் ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்க முடியாது. 

ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடக்கும் போது நாம் நடுநிலை வகிப்பதே சரியாக இருக்கும்.இதுவே சரியான அணுகுமுறை என்று அவர் கூறினார்.க்ஷ்`மேலும் ரஷ்யாவும்- சீனாவும் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. அதுபோன்ற சூழலில் இந்த விவகாரத்தில் நாம் எடுக்கும் முடிவு ரஷ்யா- சீனா நெருக்கத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பளித்து விடக்கூடாது.

இப்போது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க கூட்டணி நாடுகள் முயன்று வருகின்றன.இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் இந்தியாவும் பாதிக்கப்படும்.அதனால் தடை என்பது தனிநாடுகள் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதை ஏற்கெனவே இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

click me!