நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நாட்டை விட்டுக்கொடுக்க போவதில்லை.
உக்ரைன் தொடர்பாக ரஷ்யா வெளியிடும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம். நானும் நம் படைகளும் "கிவ்" நகரில் தான் உள்ளோம், இறுதிவரை நாட்டிற்காக எங்களுடைய போராட்டம் தொடரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் 3வது நாளாக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மெலிடேபோல் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதற்கு, கடல், வான்வெளி வழியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தலைநகரை பாதுகாப்பதற்கு, ஆண்களும், பெண்களும் ஆயுதங்களுடன் உலா வருகின்றனர். ரஷ்ய படைகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவிடம் அதிபர் ஜெலன்ஸ்கி சரணையடையக் கூறியதாக தகவல்கள் வெளியானதையடுத்து, இதை அந்நாட்டு அதிபர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில்;- நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை.
நாட்டை விட்டுக்கொடுக்க போவதில்லை; ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். பிரான்ஸ் நாட்டிடமிருந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.