உக்ரைன் நாட்டின் முக்கியப் பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதால், உடா, லோகன், கார்கிவ் ஆறு சங்கமிக்கும் கார்கிவ் நகரைக் கைப்பற்ற அடுத்த 24 மணிநேரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
உக்ரைன் நாட்டின் முக்கியப் பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதால், உடா, லோகன், கார்கிவ் ஆறு சங்கமிக்கும் கார்கிவ் நகரைக் கைப்பற்ற அடுத்த 24 மணிநேரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
யுக்ரேன் மீது கடந்த 24ம் தேதி படையெடுத்து ரஷ்யா போரிட்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே முழு மூச்சுடன் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. யுக்ரேன் ராணுவமும் ரஷ்யப் படைகளை விரட்டியடிக்க கடுமையாக முயன்று வருகிறது.
கீவ் புறநகர்ப் பகுதியில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியநிலையில் அதைக் கைப்பற்றினால் தலைநகரைக் கைப்பற்றுவதற்கான முகாமாக இந்த இடம் மாறக்கூடும்.
இ்ந்தப் போரில் ரஷ்யா ராணுவம் நன்கு திட்டமிட்டு படைகளை நகர்த்தி வருகிறது. உக்ரைனை கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து தாக்கிய பின் பல முனைகளில் இருந்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரில் இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம், ஆயிரக்கணக்கான மக்கள் புகலிடம் தேடி தப்பியிருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
உக்ரேனிய நகரங்களுக்கு வெளியே டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதால் நகரத்தைக் கைப்பற்றுவது உறுதியானது என்று போர் ஆய்வுக்கான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் ரஷ்ய ராணுவம் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டொனெட்ஸ் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதியிலிருந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். இந்த இரு மாநிலங்களைத்தான் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புதின், சுதந்திரம் பெற்றதாகஅறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய படையின் திட்டம் என்பது கிழக்குப்பகுதியில் போர் செய்துவரும் உக்ரைன் வீரர்ளைக் குறிவைத்துதான். அதேநேரம், 4 முனைகளிலும் ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகிறார்கள்.
ஆனால், கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ரஷ்யப் படைகள் தரைப்படை மூலமும், குறைந்தஅளவு விமானப்படை மூலம் மட்டுமே நடத்தி வருகிறார்கள். ரஷ்யாவின் கடற்படை ஒடிசி பகுதியிலும், ஜோவ் கடற்பகுதியிலும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனன
உக்ரைனைக் கைப்பற்ற ரஷ்யா பயன்படுத்திய 4 விதமான திட்டங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்
பெலாரஸ்-கிவ்
ரஷ்ய ராணுவத்தினர் நேற்று நிப்ரோ நிதியின் மேற்குக் கரை வழியாக கிவ் நகரின் புறப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர்ர். ரஷ்ய ராணுவத்தினர் சாதாரண உடையில் கிவ் நகரில் நடமாடுவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை கிவ் நகருக்குள் ரஷ்யபடைகள் நுழையவில்லை. ஆனால், ரஷ்யப்படையின் வேகத்தை வெற்றிகரமாக உக்ரைன் ராணுவத்தினர் குறைத்துவிட்டனர்.
இதனால், செர்னிஹிவ் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றவிடாமல் உக்ரைன் ராணுவம் தடுத்துவிட்டனர். ரஷ்யாவின் 76-வது விடிவி எனும் வான்படைப்பிரிவு, பெலாசரஸின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள செர்னிஹிவ் பகுதியை அடுத்த 24மணிநேரத்தில் இலக்காக வைக்கும்எனத் தெரிகிறது.
கார்ஹிவ்
கார்ஹிவ் நகரின் புறநகரில் ரஷ்யப்படைகள் மரண ஆயுதங்கள், டேங்கிகள் போன்றவற்றுடன் நிற்பதால், அடுத்த சிலமணிநேரங்களில் கார்ஹிவ் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வரும்
டான்பாஸ்
டான்பாஸ் பகுதியில்தான் ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் ஆவேசாக போரிட்டுவருகிறது. உக்ரைன் ராணுவம் தனது பெரும்பகுதி படையை இங்கு குவித்து போரிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிமியா-கெர்சன்
கிரிமியாவின் வடபகுதியில் உள்ள கெர்சன் நகரை ரஷ்ய படைகள் முழுமையாக பிடித்துவிட்டனர். அடுத்த சில மணிநேரங்களில் கிழக்குப்பகுதியில் இருக்கும் மெலிடோபோல் நகரையும் ரஷ்யாபடைகள் கைப்பற்றிவிடுவார்கள். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, மேற்கு உக்ரைனில் இருக்கும் ரிவைன் நகருக்குள் முன்னேறுவதற்காக, பெலாரஸின் ஸ்டோலின் பகுதியில் குவிந்துள்ளார்கள்.