ரஷ்ய அதிபர் புடினைக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்தது உக்ரைன் ராணுவம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது ரஷ்யா.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்து, ஒரே இரவில் கிரெம்ளின் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது என்று ரஷ்ய அரசு நடத்தும் ஆர்.ஐ.ஏ (RIA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் சிட்டாடலில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் ரஷ்ய பாதுகாப்புகளால் முடக்கப்பட்டதாகவும் ரஷ்ய அரசு கூறியது. இந்த தாக்குதலில் புடினுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், கிரெம்ளின் கட்டிடங்களுக்கு பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
"கிரெம்ளின் இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும், வெற்றி தினமான மே 9 அணிவகுப்புக்கு முன்னதாக அதிபரை படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் RIA கூறியது. தற்போது ரஷ்ய அதிபர் புடின் தனது அட்டவணையை மாற்றவில்லை என்றும், வழக்கம் போல் வேலை செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ செய்தி நிறுவனமான ஸ்வெஸ்டாவின் சேனல் உட்பட ரஷ்ய சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, கிரெம்ளின் அரண்மனையின் பிரதான அரண்மனைக்கு பின்னால் வெளிறிய புகை எழுவதைக் காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ
இதையும் படிங்க..ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேருக்கு ஆப்பு.? இனி AIதான் வேலை செய்யும் - ஐபிஎம் சிஇஓ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்