எஸ்-400 உலகின் தலைசிறந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும் ரஷ்யா தவிர சீனாவிடம் மட்டுமே சில அலகுகள் உள்ளன. உலகில் இந்தியா தனது முதல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தாண்டே ரஷ்யாவிடமிருந்து பெற உள்ளது.
எஸ்-400 ஏவுகணை அமைப்பு என்பது எஸ்-300 புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இது சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவில் வரும் ஏவுகணைகள் மற்றும் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களையும் தாக்கி அழிக்கக்கூடியது. இந்த அமைப்பால் ஒரே நேரத்தில் 72 ஏவுகணைகளை சுட முடியும், இந்த அமைப்பு அமெரிக்காவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த போர் விமானமான எப்-35-ஐ தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். அதே நேரத்தில் இதனால் ஒரே நேரத்தில் 36 அணு சக்தி திறன் கொண்ட ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும். தற்போது சீனாவுக்கு பிறகு இந்த பாதுகாப்பு முறைகளை வைத்துள்ள இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அணுசக்தி திறன்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்க எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை கவசமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து சீனா பெற இருந்த நிலையில், ரஷ்யா இதை சீனாவுக்கு வழங்குவதை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சீனா, இது சில நாடுகளில் அழுத்தத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு என கூறியுள்ளது. ஆனால் எந்த நாட்டின் பெயரையும் அது குறிப்பிடவில்லை, இந்தியாவையும் அமெரிக்காவையும் குறிப்பதாக சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்துள்ளனர்.
எஸ்-400 உலகின் தலைசிறந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும் ரஷ்யா தவிர சீனாவிடம் மட்டுமே சில அலகுகள் உள்ளன. உலகில் இந்தியா தனது முதல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தாண்டே ரஷ்யாவிடமிருந்து பெற உள்ளது. சீனாவுக்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ள ரஷ்யா, மீண்டும் இதை சீனாவுக்கு வழங்குவது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து தெரிவித்துள்ளார் சீன ஊடகங்கள் ஆயுதம் வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்படவில்லை என்பதை இது காட்டுகிறது, அதேநேரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால் மட்டும் போதாது ஆயுதங்களை பெறுவது முக்கியம் என விமர்சித்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்டது எனவும், அதே அழுத்தமே சீனாவுக்கு ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிறுத்த காரணம் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஏவுகணையை பயிற்றுவிக்க, சீனா தனது குழுவினரை ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தது. அதேபோல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு வருகை தந்துள்ளனர். இனிமேல் அது தொடராது என கூறப்படுகிறது.
ரஷ்யா ஏன் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சீனாவுக்கு வழங்க தயங்குகிறது:
சர்வதேச அளவில் சீனா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு, சீனாவைப் பற்றி ரஷ்யாவை யோசிக்க வைத்துள்ளது. தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில்,எஸ்-400 சீனாவிற்கு வழங்கப்பட்டால், சீனா தற்போது உள்ள பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்தும் என ரஷ்யா உணர்கிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா இந்த ஏவுகணை முறையை வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவுக்கு தலைசிறந்த நட்பு நாடு என்பதால் ரஷ்யா இந்த முடிவு எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்புகள், 2018 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு இந்த அமைப்பு முறை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால் சீனாவிற்கு வழங்குவதை நிறுத்திய ரஷ்யா, அதை சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்க உறுதியளித்துள்ளது.
ரஷ்யா-சீனா இடையே உறவு:
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நீடித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா சமீபத்தில் அதன் செயின்ட் பீட்டர் ஸ்பர்க் ஆர்க்டிக் சமூக அறிவியல் அகாடமியின் தலைவர் வலேரி மிட்கோவை கைது செய்தது, வலேரி பல மாதங்களாக உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் அவர் சீனாவுக்கு மிகவும் முக்கியமான ராணுவ தகவல்களை வழங்கியதாகவும், அதற்கு இணையாக அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், ரஷ்ய உளவு அமைப்பு குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவரின் மூன்று கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 2 பேர் சீனர்கள் ஆவர். அப்போதிலிருந்து இருநாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.