ரஷ்யாவில் புடினோடா ஆட்சி நீடிக்காது... ஆவேசமாக சொன்ன ஜோ பைடன்!!

By Narendran S  |  First Published Mar 27, 2022, 10:57 PM IST

ரஷ்ய அதிபர் புடின் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ரஷ்ய அதிபர் புடின் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று வரை ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் இரு நாடுகளை சேர்ந்த பலரும் இந்த போரில் உயிரிழந்தனர். இருந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது. போர் நீடித்துவரம் நிலையில் எல்லை நகரான டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 32 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடினின் போரானது ரஷ்யாவின் வியூக தோல்வி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதுக்குறித்து பேசிய அவர், கடவுள் சாட்சியாக ரஷ்ய அதிபர் ஆட்சியில் நீடிக்க முடியாது. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் அந்நாட்டின் பொருளாதார பலம் அடுத்த சில ஆண்டுகளில் பாதியாக குறையும். உக்ரைன் மீதான படையெடுப்பதற்கு முன்பு, உலகின்  பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடாக ரஷ்யா இருந்தது. விரைவில் அந்நாடு 20 இடத்திற்கு செல்லும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பை இழக்கும். உக்ரைன் மீது தொடுத்துள்ள மிருகத்தனமிக்க ரஷ்ய அதிபர் புடினின் போரானது ரஷ்யாவின் வியூக தோல்வி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைவை ரஷ்யா ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஏனென்றால் உக்ரைன் மக்கள் சுதந்திரமான மக்கள். அவர்கள் நம்பிக்கையற்ற மற்றும் இருள் நிறைந்த உலகில்  வாழமாட்டார்கள். ஜனநாயகம், கொள்கை, நம்பிக்கை, கண்ணியம், சுதந்திரம் ஆகியவற்றில்  வேரூன்றிய பிரகாசமான எதிர்காலம் எங்களுக்கு இருக்கிறது.

கடவுளின் சாட்சியாக செல்கிறேன் ரஷ்ய அதிபர் புடின் ஆட்சி அதிகாரத்தில் இனி நீடிக்க முடியாது. நேட்டோ உறுப்பு நாடுகளின் ஒரு அங்குலம் அளவிற்கு சேதம் ஏற்பட்டாலும் மேற்கத்திய நாடுகள் தலையிடும். உலக நாடுகள் நீண்டகால சண்டைக்கு தயாராக வேண்டும். சில நாட்கள் அல்லது மாதங்களில் நாம் போரில் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். ஜோ பைடனின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்று சர்வதேச ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதை அடுத்து அதிபர் ஜோ பைடன் உரை தொடர்பாக வெள்ளை மாளிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் என்று அர்த்தத்தில் கூறவில்லை. இவ்விவகாரத்தில் அதிபரின் கருத்து என்னவென்றால், ரஷ்யாவின் அண்டை நாடுகளின் மீது புடின் தனது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

click me!