இந்தியரை இனவெறியோடு திட்டிய ஓட்டுநர்.. தொடரும் அவலங்கள் - கடும் நடவடிக்கை எடுத்த சிங்கப்பூர் GRAB நிறுவனம்!

By Ansgar R  |  First Published Oct 12, 2023, 4:26 PM IST

Singapore : இனவெறியோடு பேசி தனது காரில் பயணித்த பயணியை காரை விட்டு இறங்கச் சொன்னதாகக் கூறப்படும் கிராப் நிறுவன ஓட்டுநர் ஒருவர், அந்நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக பிரபல டாக்சி சேவை நிறுவனமான கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக வெகு சில டாக்சி ஓட்டுனர்கள், சிங்கப்பூரில் வசிக்கு பிற நாட்டவர்கள் மீது இனவெறி கருத்துக்களை பிரயோகிப்பது, தொடரும் ஒரு அவலமாக மாறியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 10-ம் தேதி முதல் ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருகிறது.
 
வெளியான அந்த காணொளி, ஒரு வாகனத்தின் பின் இருக்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிளிப்பாகும், அதில் அந்த காரின் ஓட்டுநர் தனது பயணியிடம் "குப்பைக்கு சமமான இந்தியன்" என்று அவரை நோக்கி கூறுவதைக் கேட்க முடிகிறது. மேலும் பிக்-அப் செய்யும் போது, தன்னை (கார் ஓட்டுனரை) நீண்ட நேரம் அந்த பயணி காத்திருக்க வைத்ததாகவும், அவர் கூறுவதை கேட்க முடிகிறது.

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியைத் தொடங்கிய வெளியுறவுத்துறை

Latest Videos

undefined

அந்த பயணியின் கூற்றுப்படி, கிராப் நிறுவனம், காத்திருக்கும் நேரத்தை கணக்கிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொள்ளும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ஓட்டுநர், பயணியிடம் வண்டியை விட்டு கீழே இறங்க சொல்லியுள்ளார், ஆனால் அவர் தொடர்ந்து வண்டியை ஓடிக்கொண்டே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஏன் இனவெறியோடு பேசுகிறீர்கள் என்று அந்த பயணி கேட்க, தான் அவ்வாறு பேசவில்லை என்று முதலில் மறுத்துள்ளார்.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர், "இந்தியர்கள் தனக்குத் தெரிந்ததிலிருந்து, தாமதமாக வருவார்கள்" அந்த என்று டிரைவர் கூறியுள்ளார். இறுதியில் அந்த பயணியுடன் மேலும் வாக்குவதத்தளில் ஈடுபட்டு அவரை வண்டியை விட்டு இறங்குமாறு கதியுள்ளார். உடனே அந்த பயணி கிராப் நிறுவனத்திடம், அந்த வீடியோவோடு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கிராப் வெளியிட்ட பதிவில், "மக்களை இனவெறியோடு பேசுவதை கிராப் நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும். அந்த ஓட்டுனரை உடனே பணியிடை நீக்கம் செய்வதாகவும்" அறிவித்துள்ளது. 

இஸ்ரேல் குழந்தைகள் தலை துண்டிப்பை உறுதி செய்த ஜோ பைடன்; தரை வழி தாக்குதலுக்கு தயாராகும் டெல் அவிவ்!!

click me!