ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் புதிய கொரோனா அலை வேகமாகப் பரவி வருவதால், தொற்று உயிரிழப்பும்அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் புதிய கொரோனா அலை வேகமாகப் பரவி வருவதால், தொற்று உயிரிழப்பும்அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஊடகங்களுக்கப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒமைக்ரான் வைரஸின் திரிபு வைரஸ் பரவல் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிகரித்து வருகிறது, உயிரிழப்பும் அதிகரிக்கிறது. ஆதலால், மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து வெளியே செல்வதை உறுதி செய்ய வேண்டும். புதிய அலையால் உயிரிழப்புகள் அதிகரி்த்து வருவது கவலையளிக்கிறது.
இலங்கையை போல கலவர பூமியான சீனா... 1.5 பில்லியன் டாலர் வைப்புநிதி முடக்கம்... என்ன நடந்தது?
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் திரிபுகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவைதான் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடங்கியிருந்த மக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இதனால் ஒமைக்ரான் வைரஸின் திரிபுகள் பரவல் அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் மட்டும் 21 லட்சம் மக்கள் அல்லது 25 பேருக்கு ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒருவர் கொரோனாவில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கும் புதிதாக பரவும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்தியிருப்பதால் தீவிரமானத்தன்மை ஏதும் இல்லாமல் இருக்கிறது
china bank protest: சீனாவில் வங்கிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: பணம் வழங்க அரசு உறுதி
ஆனால், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் ஒமைக்ரானின் புதிய திரிபுகள் வேகமாகப் பரவி வருவது கவலையளிக்கிறது. ஆதலால் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஒமைக்ரானின் பிஏ.5 வைரஸ் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள். ஆனால், ஏற்கெனவே இருந்த ஒமைக்ரான் அளவுக்கு பிஏ.5 வைரஸ் தீவரமானது என்பதற்கு எந்த ஆதராங்களும் இல்லை.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளைப் பின்பற்றியபோதிலும், கண்காணிப்பை அதிகப்படுத்தியபோதிலும் வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கிறது.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.