பிரி்ட்டனின் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவ ஏற்று வரலாறு படைக்க உள்ளார். அவர் எம்.பியாகியது முதல் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை கடந்துவந்த பாதைகளைப் பார்க்கலாம்.
பிரி்ட்டனின் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவ ஏற்று வரலாறு படைக்க உள்ளார். அவர் எம்.பியாகியது முதல் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை கடந்துவந்த பாதைகளைப் பார்க்கலாம்.
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக், லிஸ் டிரஸிடம் தோல்வி அடைந்தார்.
பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்; பிரதமர் மோடி வாழ்த்து!
பரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்களில் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தபிரதமர் தேர்வுக்கு ரிஷி சுனக், பென்னி மோர்டன்ட் இடையே நடந்த போட்டியிலும் மோர்டன்ட் விலகினார். இதையடுத்து, பிரிட்டனின் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார்.
ரிஷி சுனக் எம்.பியாகியது முதல் பிரதமராக தேர்வாகியது முதல் கடந்த வந்த அரசியல் பாதையைப் பார்க்கலாம்.
2015: யார்க்சையர் மாகாணத்தில் ரிச்மாண்ட் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பியாக ரிஷி சுனக் தேர்வாகினார்
2016: பிரக்ஸிட்டில் தீவிரமான ஆதரவாளரான சுனக், பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்
பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!!
2018: பிரதமராக இருந்த தெரஸா மே ஆட்சியில் முதல்முறையாக ரிஷி சுனக்கிற்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. பிரிட்டனின் வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சமூகநலத்துறை பொறுப்பு அளிக்கப்பட்டது.
2019, ஜூலை: பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்ஸனுக்கு ரிஷி சுனக் ஆதரவு அளித்தார், இதற்கு பதில் உபகாரமாக போரிஸ் ஜான், நிதி அமைச்சர் பொறுப்பை ரிஷி சுனக்கிடம் வழங்கினார். சஜித் ஜாவித் தலைமையின் கீழ் சுனக் செயல்பட்டார்
2020, பிப்ரவரி: சஜித் ஜாவித் பதவியை ராஜினாமா செய்தபின் 10 மற்றும் 11வது இடத்துக்கு போட்டி ஏற்பட்டது. இதில் சான்சலர் பதவிக்கு ரிஷி சுனக்கை பிரதமராக இருந்த போரிஸ் ஜான்ஸன் கொண்டுவந்தார். இதையடுத்து பிரிட்டன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிகாரமிக்க பதவியான நிதிஅமைச்சகத்துக்கு உயர்ந்தார்.
2020, ஏப்ரல்: பிரிட்டனில் கொரோனா காலத்தில் 2020 மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அப்போது, ரிஷி சுனக் அறிமுகப்படுத்திய மினிபட்ஜெட், கொரோனோ தடுப்பு முறைகள், நிதியுதவிகள் ஆகியவை ஏராளமான மக்களின் வேலைவாய்ப்பையும், தொழிலையும் காப்பாற்றியது.
நம்மை அடிமையாக்கி ஆண்டவர்களை ஆளப் போகும் முதல் இந்திய வம்சாவழி ரிஷி சுனக்; யார் இவர்?
2021: கன்சர்வேட்டிவ் கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் ரிஷி சுனக் என்ற இடம் மக்கள் மத்தியில் உறுதியானது. இதனால் கன்சர்வேட்டிவ் கட்சியில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது, ரிஷி சுனக் பெயர் மேலே எழுந்தது.
2022, பிப்ரவரி: கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, போரிஸ் ஜான்ஸன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக ரிஷி சுனக் ஒப்புக்கொண்டார்
2022, ஏப்ரல்: ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி, தனது தந்தையின் நிறுவனமான இன்போசிஸ் வருமானத்துக்கு வரி செலுத்தவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
2022, ஜூலை: பிரிட்டனின் நிதி அமைச்சர் பதவியிலிருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்
2022, ஜூலை 8: பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தார்போல் போட்டியில் ரிஷி சுனக் களமிறங்கினார்.
2022, ஜூலை 20: ரிஷி சுனக் 137 வாக்குகளுடன் பிரதமர் தேர்தலில் முன்னணியில் இருந்தார், ஆனால், இருதியில் லிஸ் டிரஸ் வென்று பிரதமராகினார்
2022, ஆகஸ்ட் 5: ரிஷி சுனக் டிவி விவாதத்தில் வென்றார்
2022, செப்டம்பர் 5: பிரிட்டன் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை தோற்கடித்தார் லிஸ் டிரஸ்
2022, அக்டோபர் 14: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் நிதியமைச்சராக இருந்த வாசி வார்டெங்கை நீக்கினார்
2022, அக்டோபர் 20: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் விலகல். மீண்டும் பிரதமர் போட்டி தொடக்கம்
2022, அக்டோபர் 24: பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியில் ரிஷி சுனக் வென்றார்.