பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்; பிரதமர் மோடி வாழ்த்து!

By karthikeyan V  |  First Published Oct 24, 2022, 10:27 PM IST

பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியிருப்பதுடன், அவருடன் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்துள்ளார்.
 


பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் அவரது தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 2019லிருந்து பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த ஆண்டில் மட்டும் பிரிட்டனில் 2 பிரதமர்கள் பதவி விலகிய நிலையில், பிரிட்டனில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டண்ட் ஆகிய இருவரும் இருந்தனர். 

Tap to resize

Latest Videos

UM PM Rishi Sunak: ரிஷி சுனக்; நம்மை அடிமையாக்கி ஆண்டவர்களை ஆளப் போகும் முதல் இந்திய வம்சாவழி; யார் இவர்?

ஆனால் பென்னி மோர்டண்ட் போட்டியிலிருந்து விலகியதையடுத்து, இந்திய வம்சாவளி ரிஷி சுனக் போட்டியின்றி பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு, பிரிட்டன் பிரதமராக பதவியும் ஏற்றார்.

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள உங்களுடன் (ரிஷி சுனக்) சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030 ரோட்மேப்பை செயல்படுத்துவதிலும் இணைந்து செயல்பட விழைகிறேன். பிரிட்டன் வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!!
 

click me!