பிரதமர் வைத்திருக்கும் சர்ச்சையைக் கிளப்பிய பேக் டுமி அரைவ் பிராட்லி மாடல் என்று தெரிகிறது. இது செல்ஃப்ரிட்ஜ்கள் போன்ற ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகளில் 750 பவுண்டுக்கு விற்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் விலை உயர்ந்த தோள்பையை அணிந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றது சர்ச்சையாகியுள்ளது. நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான கார்ன்வாலுக்குச் சென்றபோது, 750 பவுண்டு (இந்திய மத்திப்பில் தோராயமாக ரூ.79,497) மதிப்புள்ள தோள்பையை அணிந்து சென்றது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரிஷி சுனக் கார்ன்வாலுக்கு ரயிலில் செல்லும்போது, 'RS' என்ற தனது பெயரின் முதல் எழுத்துக்கள் கொண்ட ஒரு ஆடம்பர டுமி பையை எடுத்துச் சென்றதைக் காண முடிந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள பென்சான்ஸுக்கு ரயிலில் ஸ்லீப்பர் பெர்த்தில் ரிஷி சுனக் பயணித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் வைத்திருக்கும் சர்ச்சையைக் கிளப்பிய பேக் டுமி அரைவ் பிராட்லி மாடல் என்று தெரிகிறது. இது செல்ஃப்ரிட்ஜ்கள் போன்ற ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகளில் 750 பவுண்டுக்கு விற்கப்படுகிறது.
ராதிகாவுடன் ‘க்ரூஸ் டிரிப்’ செல்லும் ஆனந்த் அம்பானி! கண்டிஷன் போட்டு விருந்தினர்களுக்கு அழைப்பு!
Paddington Station, London: Rishi Sunak boarding the sleeper train to Cornwall, sporting a £750 luxury monogrammed Tumi Arrive Bradley backpack pic.twitter.com/ojWi76ovcu
— Jane Fleming (@fleming77)ரிஷி சுனக் இவ்வாறு விலை உயர்ந்த பொருளை பயன்படுத்துவது முதல் முறை அல்ல. ஜூலை 2022இல், அவர் ஒரு கட்டிடத் தளத்திற்குச் சென்றபோது 490-பவுண்டு மதிப்புள்ள பிராடா பிராண்டு தோல் காலணிகளை அணிந்திருந்தார்.
சமீபத்திய சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பை மிஞ்சியிருக்கிறது.
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தி தம்பதியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் இங்கிலாந்தின் மன்னரான சார்லஸை முந்தி, அவர்களின் சொத்து மதிப்பு 529 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 651 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது.
பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட ஆண்! 12வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!